உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விதி மீறி இயக்கிய 5 வாகனங்கள் பறிமுதல்

விதி மீறி இயக்கிய 5 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்;நாமக்கல் கலெக்டர் உமா, சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில், நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் போலீசாருடன் இணைந்து பூங்கா சாலை, பஸ் ஸ்டாண்ட், திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற, 75 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், உரிய ஆவணங்கள் இன்றியும், பதிவு சான்று புதுப்பிக்காமலும், இன்சூரன்ஸ் கட்டாமலும், பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற, 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை