உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கந்தசாமி கண்டர் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கந்தசாமி கண்டர் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ப.வேலுார்: ப.வேலுார் கந்தசாமி கண்டர் கல்லுாரியில், 1987 முதல், 1990 வரை இளங்கலை பொருளாதாரம் படித்த முன்னாள் மாணவர், மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, 34 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ரங்கநாதன், கந்தசாமி, சாம்பன், சந்திரசேகரன், அன்பு, முன்னாள் பேராசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் அழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர். மேலும், கலந்து கொண்ட பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அனந்தபத்மநாபன், செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை