உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கருணாநிதியின் நாணயம் வெளியிடுவது நுாற்றாண்டு விழாவுக்கு பெருமை: எம்.பி

கருணாநிதியின் நாணயம் வெளியிடுவது நுாற்றாண்டு விழாவுக்கு பெருமை: எம்.பி

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்-றாண்டு விழா பேச்சு போட்டியில், மாவட்டம் முழுதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கிழக்கு, மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞர் அணி சார்பில், 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நுாற்றாண்டு பேச்சு போட்டி, நாமக்கல்லில் நடந்தது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாதன் வர-வேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், இளைஞ-ரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், நாமக்கல் மாநக-ராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சி அடைந்தது. 1989ல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கலை, மருத்துவம், பொறியியல் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்-தினர். 30 ஆண்டுகளாக இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்-பட்டு வருகிறது. அவரது நுாற்றாண்டை கொண்டாடி வரும் வேளையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாளை (இன்று) கருணாநிதி நாணயம் வெளியிடுவது, நுாற்-றாண்டு விழாவுக்கு பெருமை சேர்க்கும்.இவ்வாறு அவர் பேசினார்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாநில, மாவட்ட, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ