உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..

நாட்டிய கலைஞர் யாமினி காலமானார்..

புதுடில்லி: புகழ்பெற்ற பரத நாட்டியக்கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, 84, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.ஆந்திராவின் சித்துாரில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்த யாமினி, சிறு வயது முதலே பரத நாட்டிய கலையில் சிறந்து விளங்கினார். சிதம்பரத்தில் வளர்ந்த இவர், சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில், 5 வயது முதல் நடனமாடத்துவங்-கினார். குச்சிப்புடி, ஒடிசி போன்ற நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்று, தன் கலை ஆர்வத்தை விரிவுபடுத்திய யாமினி, கர்நாடக இசை மற்றும் வீணை இசையிலும் சிறந்து விளங்கினார். கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்-பட்டு இருந்த யாமினி, டில்லியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை