உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்நாமக்கல், ஆதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார். துணைத்தலைவர் கண்ணன், மகளிரணி செயலாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் மலர்கண்ணன், முன்னாள் மாநில மகளிரணி செயலாளர் வாசுகி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.அதில், ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, அதற்கான ஊதியத்தை பெறும் உரிமையை மீண்டும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல், தமிழக ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். பள்ளி வேலை நாட்களை, 220 ஆக மாற்றியிருப்பதை, பள்ளிக்கல்வித்துறை திரும்ப பெறவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை