உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்

துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்

நாமக்கல்;நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம், துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் விதை, உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.நாமக்கல் வட்டார விவசாயிகள், நிலக்கடலை பயிரில் துவரை பயிரை ஊடுபயிராக பயிரிட்டு பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள், நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டோ அல்லது அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டோ, துவரை சாகுபடிக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !