உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெகிழி இல்லா கொல்லிமலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

‍சேந்தமங்கலம்: கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதுடன், பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கொல்லிமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு, மாவட்ட நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. இந்த தடை சில நாட்கள் மட்டும் கடைப்பிடித்த நிலையில், வல்வில் ஓரி விழா அன்று மட்டும் காரவள்ளி சோதனை சாவடி, சோளக்காடு உள்ளிட்ட பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற நாட்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்‍லை. இதனால், மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.இதனால், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நெகிழி இல்லா கொல்லிமலை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சோளக்காடு பஸ் ஸ்டாப், செம்மேடு பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி