உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்

குமாரபாளையம்:குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின் நுாலகத்துறை சார்பில், 'இன்று ஒரு வாசகர், நாளை ஒரு தலைவர்' என்ற தலைப்பில், தேசிய நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவர் வருண்குமார் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் விமல்நிஷாந்த், ''அனைவரும் புதுமைகளை வளர்ப்பதில் தங்களது பங்களிப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.வணிக நிர்வாக இளங்கலை மூன்றாமாண்டு மாணவி வித்யாஸ்ரீ, சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். தலைமை நுாலகர் திருமலைசெல்வன், மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாகவும், தொழிலதிபர்களாகவும் மாற, தங்களது வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென பேசினார். நுாலகர் ஜோதி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்