உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்

புதிய சாலை அமைத்து 20வது நாளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுகின்றனர்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில், தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் சேகர், பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:மாதேஸ்வரன், தி.மு.க.,: குப்பையை சேகரித்து வைக்க இடமில்லாததால், துாய்மை பணியாளர்கள் சரியாக குப்பையை வாங்க வருவதில்லை. குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. பலமுறை புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.ராஜவேல், அ.தி.மு.க.,: கோழிக்கடை கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இவைகளை வாங்கி எரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேகர், கமிஷனர்: குப்பை எரிக்க, ஆறு மாத காலத்திற்குள் இயந்திரம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஐந்து இடங்களில் குப்பை பிரிக்கும் மையம் வைக்கப்பட்டுள்ளது. குப்பையை வாங்குபவர்கள் எரிக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினேஷ், பா.ஜ.,: குப்பையை எடுத்து செல்லாமல் தேங்கி கிடக்கிறது. பெரிய வார்டு, ஒரே ஒரு பேட்டரி வாகனம் மட்டுமே உள்ளது. கூடுதலாக இன்னொரு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும். சாக்கடைகளில் உறிஞ்சு வாகனம் வைத்து, கழிவுநீர் அகற்றப்படாமல் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது.கமிஷனர்: இன்னும் ஒரு வார காலத்திற்குள் உறிஞ்சு வாகனம், நகராட்சிக்கு வந்துவிடும். அதுவரை தற்காலிகமாக உள்ள வாகனத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தப்படும்.ரவிக்குமார், தி.மு.க.,: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 20 நாட்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள், உப்பு நீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டி வருகின்றனர். சாலை அமைத்தும் பயனில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ