உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

100 நாள் வேலை கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

நாமக்கல், நிறுத்தப்பட்ட நுாறு நாள் வேலையை மீண்டும் வழங்க கோரி, லக்கமநாயக்கன்பட்டி கிராமத்தினர் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சிவியாம்பாளையம் அடுத்த லக்கமநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் அனைவரும், நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வந்தோம். கடந்த, ஐந்து மாதங்களாக, 10 பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டு மீதமுள்ள எங்களுக்கு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, எங்களுக்கு மீண்டும், நுாறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை