உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டவுன் பஞ்சாயத்துகளின் துப்புரவு மேற்பார்வையாளர் சங்க கூட்டம்

டவுன் பஞ்சாயத்துகளின் துப்புரவு மேற்பார்வையாளர் சங்க கூட்டம்

ப.வேலுார்,:ப.வேலுார் தனியார் விடுதியில், நேற்று தமிழக டவுன் பஞ்சாயத்துகளின் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.தலைவர் இளங்கோவன், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் வெங்கடேசன், தணிக்கையாளர் ரவி உள்பட, 20க்கும் மேற்பட்ட துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவித்துள்ளனர். நகராட்சியாக அறிவிக்கப்பட்டால், பேரூராட்சியில், 15 ஆண்டுகளாக பணிபுரியும், 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் பதவி உயர்வு அனைத்தும் பாதிக்கப்படும்.எனவே, பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களை, சுய விருப்பத்தின் பேரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரிய நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை