உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனை சேர்ந்த, 61 அரசு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம், அலங்கா-நத்தம் அரசு பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் முருக செல்-வராஜ் தலைமை வகித்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் அருண் மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு குறித்து பேசினார். இதேபோல், செவ்வந்திப்பட்டியில் நடந்த பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருப்பண்ணன், வட்டார பயிற்றுநர் பெரியசாமி கலந்து கொண்டு பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை