உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்

வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்

நாமகிரிப்பேட்டை;ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, சீராப்பள்ளி, பட்டணம் உள்ளிட்ட பகுதியில், இரவு, 9:00 மணிக்கு துாறல் மழையாக தொடங்கியது. சிறிது நேரத்தில் கன மழையாக மாறியது. இரவு முழுவதும் மழை பெய்தது. காலை, 6:00 மணிக்குத்தான் மழை ஓய்ந்தது. இதனால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. முக்கியமாக வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.சாக்கடைகளில் பல இடங்களில் அடைப்பு இருந்ததால் மழைநீர் செல்லாமல் சாலைகளில் வழிந்தோடியது. மேலும், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளன. மூலப்பள்ளிப்பட்டி பகுதியில் வெங்காய வயல்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாமல் போனால் வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ