மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
பள்ளிப்பாளையம்: ''புத்தகம், செய்தித்தாளில் படித்தால், மாணவர்கள் மனதில் எளி-தாக பதிவாகும்,'' என, பள்ளிப்பாளையத்தில் உள்ள சேஷசாயி காகித ஆலை நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் தெரி-வித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:விவசாயத்தை சார்ந்து காகித தொழில் உள்ளது. காகிதமானது விரைந்து மட்குவதால், பூமிக்கு தீங்கு ஏற்படாது. மரம், கரும்பு சக்கை போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுவதால், இது விவசாயம் சார்ந்த தொழிலாக அமைகிறது. ஆண்டுக்கு, 15 கோடி மரங்களை வளர்க்க எங்கள் நிறுவனம் விவசாயிகளுக்கு உதவுகிறது. இந்திய அளவில், ஆக., 1ல் இன்று காகித தினம் கொண்டாடப்படுகிறது. மொபைல், கம்ப்யூட்டரில் செய்திகள் படித்தால் மனதில் பதியாது; ஆனால், மாணவர்கள் தினமும் புத்-தகம், செய்தித்தாள்களில் படித்தால் மனதில் எளிதாக பதிவாகும். காகிதத்தில் இருந்து படிப்பது ஒருவரின் கண்களுக்கு ஆரோக்கிய-மானது. காகிதம் தயாரிக்க ஒரு மரம் வெட்டினால், மூன்று மரம் நடப்படுகிறது. அதனால், காகிதத்தை உபயோகிப்போம், சுற்றுப்-புறச்சூழலை பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
05-Oct-2025
05-Oct-2025