உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

நாமக்கல்: ஆடி, நான்காம் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை, 6:00 மணிக்கு, செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவிலில், சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பழ வகைககள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், நாமக்கல் பலபட்டறை மாரியம்மன், எஸ்.வாழ-வந்தி செல்லாண்டியம்மன், மாரியம்மன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது.* நாமக்கல் -- சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., நகரில், தங்-காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் திருக்கோவில் அமைந்-துள்ளது. கருட பஞ்சமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியை-யொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு மஹா அபி-ஷேகம் நடந்தது.தொடர்ந்து மஹா வாராஹி அம்மனுக்கு, 10,008 வளையல்-களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.* ப.வேலுார், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.* வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில், அம்-மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதேபோல், வெண்ணந்துார் செல்வ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.* ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், 108 கிலோ அன்னத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்-தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி