உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

பெத்தன்ன சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆனந்தாஸ்ரமத்தில், பெத்தன்ன சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நாளை காலை நடக்கிறது. கடந்த, 11ல் முகூர்த்தகால் நடுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் வேணுகோபால சுவாமி கோவிலில் கோமாதா பூஜை, கங்கா, காவிரி தீர்த்தக்குட ஊர்வலம், மாலையில், திருவிளக்கு பூஜை நடந்தது.இன்று காலை, வேதபாராயணம், திருமுறை, சிவ பஞ்சம வேத ஹோமங்கள், மகா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை காலை, 11:00 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பெத்தன்ன சுவாமிகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மார்ச், 9 வரை மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை