உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் 52 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு

கொல்லிமலையில் 52 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு

‍சேந்தமங்கலம் : கொல்லிமலையில் வறட்சியால், தண்ணீரின்றி தவிக்கும் வன விலங்குகளுக்கு வன பாதுகாப்பு குழு சார்பில் தண்ணீர் ஊற்றப்பட்டது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடும் வறட்சி நிலவுவதால், பசுமையை பாதுகாக்கும் வகையில், கொல்லிமலை வன பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், நேற்று கொல்லிமலையில் உள்ள, 70 கொண்டை ஊசி வளைவுகளுக்கு சென்று மலையில் உள்ள வன விலங்குகளுக்கு குடிநீர் தொட்டி எங்கு உள்ளது என்றும், எந்தந்த பகுதிகளில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என ஆய்வு செய்தனர். இதில், 18 இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றினர். மேலும், 52 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி