உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சூறை காற்றுக்கு முறிந்த மின் கம்பங்கள் 25 மணி நேரத்துக்கு பின் மின் இணைப்பு

சூறை காற்றுக்கு முறிந்த மின் கம்பங்கள் 25 மணி நேரத்துக்கு பின் மின் இணைப்பு

மோகனுார் :மோகனுாரில், நேற்று முன்தினம் சூறைகாற்றுடன் கன மழை பெய்தது. அதில், மணியங்காளிப்பட்டி புதுக்காலனியில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து விழுந்ததால், அப்பகுதி இருளில் மூழ்கியது. கம்பம் சீரமைக்கப்பட்டு, 25 மணி நேரத்துக்கு பின் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டது.தமிழகத்தில், அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல், பல்வேறு மாவட்டங்களில், தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல், வெயிலின் தாக்கமும் அதிகளவில் காணப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. சொற்ப அளவிலேயே பெய்து வருகிறது. மோகனுாரில், கடந்த, 12ல் பெய்த கனமழை காரணமாக, மூன்று மணி நேரம் மின் துண்டிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், மோகனுார் பகுதியில், 4:00 மணிக்கு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த சூறாவளி காற்றில், மோகனுார் அடுத்த மணியங்காளிப்பட்டி புதுக்காலனியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் இரண்டாக முறிந்து விழுந்ததால், அப்பகுதியில், மின் தடை ஏற்பட்டது. மின்வாரியத்துறையினர், முறிந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் முயற்சியில், நேற்று காலையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, 25 மணி நேரத்துக்கு பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கியதை அடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்