ராசிபுரம், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், திருச்சியில் மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டி நடந்தது. இதில் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.ஆண்களுக்கான பளு துாக்கும் போட்டியில் மகிமைதாஸ், கவுதம், விஷ்வேஸ்வரன், லோகேஷ் ஆகியோர் தங்கபதக்கம், சந்தோஷ், சோலையரசு வெள்ளி பதக்கம், விஷ்வநந்தன் வெண்கலபதக்கம் பெற்றனர். பெண்களுக்கான போட்டியில் தமிழ்மதி, காவியா, ஜனனி வெள்ளி பதக்கம் பெற்றனர்.அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், பர்கூரில் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில் மோனிஸ்வர் வெள்ளி பதக்கம், பெண்கள் பிரிவில் அக்சயா வெள்ளி பதக்கம், ஜனனி வெண்கல பதக்கம் பெற்றனர். தடகள போட்டியில் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தொடர் ஓட்டத்தில் ஜெயப்பிரியா, வினோதா, அக்சயா, நதியா ஆகியோரும், 10,000 மீட்டர் ஓட்டத்தில் நிஷாந்தினி, 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஜெயப்பிரியா, ஈட்டி எறிதலில் வினோதா, 800, 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நதியா மூன்றாவது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஞானமணி கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். தாளாளர் மாலாலீனா, துணை தாளாளர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரி செயல் இயக்குனர் மாதேஸ்வரன், முதல்வர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.