உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா

காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா

ராசிபுரம்: முன்னாள் முதல்வர் காமராஜரின், 122-வது பிறந்த நாளை-யொட்டி, ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்-ளியில், சிறப்பு விழாவாக கொண்டாடினர். காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினர், நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, குச்சிப்புடி, பரதநாட்டியம், விவசாயி வேடம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.* குமாரபாளையம் நகர காங்., சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.* புதுச்சத்திரம் யூனியன், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசி-ரியர் கழக துணைத்தலைவர் முத்துராஜா, காமராஜர் உருவ படத்-திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.* மல்லசமுத்திரம் அருகே, ராமாபுரம், பருத்திப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில், காமராஜர் நாடார் மகாஜன பேரவை சார்பில், அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் செயல்படும் தனியார் காகித ஆலை மேல்நிலை பள்ளியில் காம-ராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்-பட்டது.* நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகராட்சி நேரு பூங்காவில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, த.மா.கா., நகர கிளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி