உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆர்வமுடன் ஓட்டளித்த முதியோர்

ஆர்வமுடன் ஓட்டளித்த முதியோர்

‍சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் தொகுதியில், காலை, 6:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியது. முதியவர்கள், காலை முதலே ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போட வந்தனர். பல முதியவர்களை உறவினர்கள் அழைத்து வந்து ஓட்டு போட வைத்தனர்.மேலும், ஓட்டு சாவடியில், 3 சக்கர சைக்கிள் கு‍றைவாக இருந்ததால், பல முதியவர்கள் குச்சியை பிடித்தபடி நடந்து சென்று ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டனர். பல இடங்களில் மாற்றுத்திறனாளி சைக்கிள்கள் இருந்தும் தள்ளி செல்ல பணியாளர்கள் யாரும் இல்லாததால் முதியவர்கள் நடந்து சென்று ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ