உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் வசதி கேட்டு மாணவியர் மனு

பஸ் வசதி கேட்டு மாணவியர் மனு

நாமக்கல்: பள்ளிக்கு செல்ல அரசு பஸ் வசதி கேட்டு, ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவியர், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பரமத்தி யூனியன், வில்லிபாளையம் கிராமம், ஜங்கமநாயக்கன்பட்டியில், 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பரமத்தி அரசு உயர் நிலைப்பள்ளிக்கு, 8 கி.மீ., துாரமும், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 12 கி.மீ., துாரம், வில்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும் சென்று படித்து வருகிறோம். அரசு பஸ் வசதி இல்லாததால், தனியார் வாகனம் வைத்து செல்லவேண்டிய நிலை உள்ளது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு, அரசு பஸ் வசதி இல்லாததால் பள்ளி படிப்பு தடையாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ