உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி, 51; இவர், கஞ்சா விற்பனை செய்வதாக, திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், செல்வியை கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், விற்பனைக்கு கஞ்சாவை கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார், நேற்று காலை, செல்வியை கைது செய்து, நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ