உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு

பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவு

டி.என்.பாளையம்: பெரிய கொடிவேரி, டி.ஜி.புதுார், நால்ரோடு, நேரு வீதியை சேர்ந்த நட்ராஜ் மனைவி உமா, 52; தம்பதிக்கு, 16 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், கைத்தறி வைத்து, உமா பட்டு சேலை நெசவு நெய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் நெசவு நெய்து கொண்டிருந்தார்.அப்போது கைத்தறி மீது வெளிச்சத்துக்கு போடப்பட்ட ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்து, உமாவை தாக்கியது. இதில் கீழே விழுந்து கிடந்த உமாவை, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினர் பார்த்து விட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. கைத்தறி நெசவு நெய்த பெண், மின்சாரம் தாக்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ