| ADDED : ஜூலை 11, 2011 10:45 PM
கூடலூர் : நாடுகாணியில் முதியவரை காட்டு யானை குத்திக்கொன்றது.கூடலூர் நாடுகாணியில் கோழிக்கோடு சாலை போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள குடியிருப்புக்குள் அதிகாலை 3.00 மணிக்கு நுழைந்த ஆண் யானை அங்குள்ள பலா மரங்களை உட்கொண்டுள்ளது. அந்நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த வேலு (79) என்பவரை யானை தாக்கி, தந்தத்தால் குத்தியுள்ளது. பின், அதிக சப்தத்துடன் பிளிரிய யானை அங்கிருந்து ஜீன்பூல் வனப்பகுதிக்கு சென்றுள்ளது.தகவல் அறிந்த தேவாலா வனச் சரகர் கணேஷ்ராம், தேவாலா டி.எஸ்.பி., சுரேஷ்குமார், வனவர் காந்தன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்த வேலு குடும்பத்துக்கு முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.