உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் ஆடி குண்டம் திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 30ம் தேதி குண்டம் விழா நடந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. நேற்று கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர்கள் தனசேகர், கண்ணன் ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்தினர். இதில், 108 பெண்கள் பங்கேற்றனர். இறுதியில் நடந்த பூஜையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். இன்று மறுபூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை