உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.24.15 கோடி வருமானம்

குன்னுார் தேயிலை ஏலத்தில் ரூ.24.15 கோடி வருமானம்

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், குன்னுார் தேயிலை மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்தில், 18.74 லட்சம் கிலோ இலை ரகம்; 5.14 லட்சம் லீப் ரகம் என, மொத்தம், 23.88 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனைக்கு வந்தது.அதில், 17.98 லட்சம் இலை ரகம்; 4.67 லட்சம் லீப் ரகமும்,' என, மொத்தம் 22.65 லட்சம் கிலோ விற்பனையானது. 24.15 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலங்களில் தேயிலை வரத்து அதிகரித்த போது, விற்பனையும் விலையும் சரிந்தது. ஆனால், இந்த ஏலத்தில், 94.86 சதவீதம் விற்பனையான நிலையில், சராசரி விலையும் கிலோவிற்கு, 2 ரூபாய் வரை உயர்ந்தது. தேயிலை துாள் ஒரு கிலோவிற்கு, 106.60 ரூபாய் சராசரி விலையாக இருந்தது. சில குறிப்பிட்ட ஸ்லாட்களுக்கு, 110 ரூபாய் வரை விலை கிடைத்தது.அதே நேரத்தில், கூட்டுறவு தொழிற்சாலைகளின், 1.96 லட்சம் கிலோ தேயிலை துாள், இன்கோ ஏலத்திற்கு வந்ததில், 100 சதவீதம் விற்ற போதும், சராசரி விலை, 92.71 ரூபாய் என, மிகவும் குறைவாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை