உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிளஸ்--டூ பொது தேர்வில் 94.27 சதவீதம் பேர் தேர்ச்சி: எட்டு அரசு பள்ளிகள் சென்டம்

பிளஸ்--டூ பொது தேர்வில் 94.27 சதவீதம் பேர் தேர்ச்சி: எட்டு அரசு பள்ளிகள் சென்டம்

ஊட்டி:நீலகிரியில் பிளஸ்-டூ பொது தேர்வில், 94.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீலகிரியில் பிளஸ்-டூ பொது தேர்வு கடந்த, மார்ச், 1 ம் தேதி துவங்கி, 22 ம் தேதி வரை நடந்தது. 38 மையங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வை, '1105 மாணவர்கள், 1055 மாணவிகள்,' என, மொத்தம், 2160 பேர் எழுதினர். நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், '964 மாணவர்கள், 986 மாணவிகள்,' என, 1,950 பேர் தேர்ச்சி பெற்றனர்.

23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில், குஞ்சப்பனை, ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி ஆகிய இரண்டு பழங்குடியின பள்ளிகள் மற்றும் கக்குச்சி, அதிகரட்டி, தாவணெ, ஈளாடா, குன்னுார் அறிஞர் அண்ணா, குன்னுார் மாதிரி பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் உட்பட 8 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல், 'மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் ,12 தனியார் பள்ளிகள்,' என, மொத்தம், 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தே ர்ச்சி விகிதம் உயர்வு

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 2023ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில், 93.86 சதவீதம் பெற்று, 29வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு, 94.27 சதவீதம் பெற்று, 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரும் ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ