உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா

தேசிய நெடுஞ்சாலையில் குட்டி யானை உலா

குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் பகுதியில் உலா வரும் குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, 11 காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை நந்தகோபால் பாலம் அருகே குட்டி காட்டு யானை சாலையில் வந்து நின்றது.இது தொடர்பாக, வனத்துறைக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர். வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை ரயில்பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.வனத்துறையினர் கூறுகையில், 'மீண்டும் இதே பகுதியில் குட்டி யானை தனியாக உலா வரும் என்பதால் வாகனங்களை ஒட்டி செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை