உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குன்னுார்:குன்னுார் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு நாள் ஜூன், 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காரணமாக பலரும் உயிரிழந்த நிலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி குன்னுாரில் போலீசார் சார்பில் நடந்தது. பெட்போர்டு பகுதியில் துவங்கிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., குமார் துவக்கி வைத்தார். மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்த ஊர்வலம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில், ஜோசப் மேல்நிலைப்பள்ளி, டிம்பர் டாப்ஸ் பள்ளி, புல்மோர் பள்ளி, மாணவ மாணவியர் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை