உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அருவங்காடு பள்ளியில்பேச்சு போட்டி

அருவங்காடு பள்ளியில்பேச்சு போட்டி

குன்னுார்:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் பேச்சுப்போட்டி நடந்தது.குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் செயல்பட்டு வரும் செந்தமிழ் சங்கம் சார்பில், வரும், 15ம் தேதி நடக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடந்தது. அதில், நடுவர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன், அசோக் குமார், சரவணகுமார் பங்கேற்றனர்.போட்டியில், 6 முதல் 8ம் வகுப்பு வரையில், 'இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு' என்ற தலைப்பிலும்; 9, 10 வகுப்புக்கான பிரிவில், 'ஜனநாயகத்தின் பெருமை' என்ற தலைப்பிலும்; பிளஸ்-1, பிளஸ்-2 பிரிவில், 'இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தாய்மொழியின் இன்றியமையாமை,' என்ற தலைப்பிலும் மாணவர்கள் பேசினர். அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை