உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உச்சம் தொட்ட பீட்ரூட் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி: கிலோ ரூ. 100 கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

உச்சம் தொட்ட பீட்ரூட் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி: கிலோ ரூ. 100 கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் கிலோ, 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.மலை காய்கறி விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையில் குறைவான வேலை மட்டுமே கொண்ட பீட்ரூட் விவசாயத்தை சில விவசாயிகள் மட்டுமே மேற்கொள்கின்றனர். மற்ற காய்கறிகளை விட பீட்ரூட்க்கு உரிய விலை கிடைக்காமல் இருந்ததாலும். திண்டுக்கல், பொள்ளாச்சி, கொடைக்கானல் போன்ற இடங்களில் வரத்து இருந்ததாலும் குறைவாகவே விளைவித்து வந்தனர். பீட்ரூட் விளைவிக்க, 60 நாட்கள் போதும் என்ற சூழ்நிலையில், தற்போது பீட்ரூட் கிலோவுக்கு, 100 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் வெளி மார்க்கெட்டில், 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக, நீலகிரி பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி