மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
கோவை, உக்கடம் காந்தி நகரை சேர்ந்த பாலு மகன் தம்புரான், 36. டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது லாரியை ஓட்டிக்கொண்டு அவிநாசி ரோட்டில் சென்றார். அப்போது, அரசூர் பிரிவு அருகே ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தம்புரான் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 3 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது-
கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் மற்றும் வையாபுரி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் மற்றும் வையாபுரி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இந்த இடங்களுக்கு போலீசார் சென்று தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது, குரும்பபாளையம் பகுதியில் மதுரையை சேர்ந்த மணிமாறன், 22, செந்தூர் பாண்டி, 19, கோபிநாத், 20, ஷகிம் ஹாசன், 20 ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் வையாபுரி நகரில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுரையை சேர்ந்த கார்த்திகேயன், 19, பாலசுப்பிரமணி, 19, வசந்த், 19 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 1/2 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் கோவில்பாளையம் பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ----கட்டட தொழிலாளியை அடித்து கொல்ல முயற்சி
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ரவி மகன் ஹரிஹரன், 25. சூலுார் அடுத்த பாப்பம்பட்டியில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பரான தேவாவுடன் பாப்பம்பட்டி டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த பாப்பம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரமேஷ், 43, தேவகோட்டையை சேர்ந்த செல்வம், 65, புதுக்கோட்டையை சேர்ந்த செல்வகணபதி, 21, மணல்மேல்குடியை சேர்ந்த பழனி முருகன், 34 ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, முன் விரோதம் காரணமாக தேவா மற்றும் ஹரிஹரனை கட்டையால் தாக்கி கொல்ல முயன்றனர்.பலத்த காயமடைந்த தேவா, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான செந்திலை தேடி வருகின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025