மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்:கூடலுார் மார்த்தோமா நகர் பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் உள்ள மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது.கூடலுாரில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழையின் போது சாலை ஓரங்களில் மரங்கள் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க, ஆபத்தான மரங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.முதல் கட்டமாக மார்த்தோமா நகர் பகுதியில் வருவாய்துறையினர் ஆய்வு செய்து, ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அதன் கிளைகளை வெட்ட பரிந்துரை செய்தனர்.தொடர்ந்து, கூடலுார் ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, அப்பகுதி சாலை ஓரங்களிலிருந்து ஆபத்தான மரங்களின் கிளைகள் வெட்டும் பணி நடந்து வருகிறது.டிரைவர்கள் கூறுகையில், 'வெட்டப்படும் மரங்களின் கிளைகளின், துண்டுகள் சாலையோரம் போடப்படுவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அவைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் வெட்டப்படும் மரக்கிளைகள், வனத்துறையினரிடம், ஒப்படைக்கப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்,' என்றனர்.
03-Oct-2025