உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

பந்தலுார்: பந்தலுாரில் மா.கம்யூ., சார்பில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார்.ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், 'மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். மின்வாரியத்தில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் ஷாஜி, ராஜகோபால், குமாரன், ரஷீது, பாப்புட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். சம்சுதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை