மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
1 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அருகே மாநில எல்லையில் குவிந்து காணப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் அகற்றப்பட்டது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழக எல்லை சோதனை சாவடி வழியாக தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்கள், ஆய்வு செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பைகள் பறிமுதல் செய்து, சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் சேகரித்து வைக்கப்படுகிறது. அதில், தாளூர் சோதனை சாவடியில், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் அகற்றப்படாமல் வைத்ததால், அதனை சுற்றி புதர் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 27ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. தொடர்ந்து, சேரங்கோடு ஊராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
1 hour(s) ago