உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தலில் நமக்கு எதிரி தி.மு.க., மாஜி., அமைச்சர் வேலுமணி பேச்சு

தேர்தலில் நமக்கு எதிரி தி.மு.க., மாஜி., அமைச்சர் வேலுமணி பேச்சு

ஊட்டி, மார்ச் 29-நீலகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைத்து, மா,ஜி,. அமைச்சர் வேலுமணி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் நீலகிரிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளோம். தி.மு.க., அரசு பொறுப்பேற்று, 3 ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மத்தியில், 35 தி.மு.க., எம்.பி.,க்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. 5 ஆண்டு கால ஆட்சியும் முடிந்து விட்டது. தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். ஒரு பூத்துக்கு குறைந்தது, 350 ஓட்டுக்கள் வாங்க இலக்கு நிர்ணயித்து பாடுபட வேண்டும். நமக்கு எதிரி தி.மு.க., தான். தேர்தலில் அ.தி.மு.க., --தி.மு.க, வுக்குத்தான் நேரடி போட்டி உள்ளது. பா.ஜ., கட்சி, 5 சதவீதம் ஓட்டுக்கள் வைத்துள்ளனர்.10 சதவீதம் ஓட்டுக்கள் வாங்கினாலும் பா.ஜ., வெற்றி பெற முடியாது. வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு. எஸ்.பி., வேலுமணி பேசினார். தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் பேசுகையில்,''நான் உங்களைப் போன்ற ஒரு தொண்டன். நான் மக்களுடன் மக்களாக நின்று தேவைகள் இருக்கிறதோ அதனை பார்லிமென்டில் பேசி தீர்த்து வைக்க பாடுபடுவேன். மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்வேன். பசுந்தேயிலை விலை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன். உங்களது மேலான ஆதரவை, எனக்கு அளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார். முன்னாள் சபாநாயகர் தனபால், மாவட்ட செயலாளர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை