உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பயிர்களை பாதுகாக்க ஓஸ் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

பயிர்களை பாதுகாக்க ஓஸ் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

கோத்தகிரி:கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், வெயிலில் இருந்து, பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் 'ஓஸ் பைப்' மூலம், தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நீர் ஆதாரங்கங்கள் வறண்டு வருகின்றன. நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிட்டு, விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பகல் நேரத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம், மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, மலை காய்கறி பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் பயிர்கள், வாட்டம் கண்டு வருகின்றன.இதே நிலை நீடித்தால், பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதனால், நீர் நிலைகளில், குறுக்கே தடுப்புகள் அமைத்து, இரவு முழுவதும் சிறுக, சிறுக சேகரமாகும் தண்ணீரை, காலை மற்றும் பகல் நேரங்களில் மோட்டார் உதவியுடன், 'ஓஸ் பைப்' மூலம், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ