உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தாள் உரம், பசுந்தீவனமாக பயன்படுகிறது பில்லி பெசரா

பசுந்தாள் உரம், பசுந்தீவனமாக பயன்படுகிறது பில்லி பெசரா

பெ.நா.பாளையம்;அவரை குடும்பத்தைச் சேர்ந்த குறுகிய கால பயிரான பில்லி பெசரா பசுந்தாள் உரமாகவும், பசுந்தீவனமாகவும் பயன்படுகிறது என, வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.இது கொடி போல் வளரும் தன்மை உடையது. களிமண் மற்றும் வண்டல் மண் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. முதலில் மெதுவாகவும், பின்பு, வேகமாகவும் வளர்ந்து, படரும் பண்பு உடையது. மண்ணின் ஈரப்பதம் சரியாக இருப்பின், வெப்பமான சூழ்நிலைகளிலும் நன்கு வளரும். இதை நுனிப்பகுதிகளை சீராக வெட்டி எடுத்து, கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக பயன்படுத்தலாம். மாடுகளை அப்படியே மேய விடலாம். பின்பு சில நாள் கழித்து மண்ணில் மடக்கி, உழுதுவிட வேண்டும். இதன் வாயிலாக, 2.5 ஏக்கருக்கு, 8 முதல், 10 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும்.இப்பசுந்தாள் உரம், நெற்பயிருக்கு மிகவும் ஏற்றது. தரை பகுதியை சீராக மூடும் தன்மை உள்ளதால், மூடு பயிராகவும், களை கட்டுப்பாட்டிலும், மண் அரிப்பினை தடுத்திடும் காரணியாகவும், பில்லி பெசரா விளங்குகிறது என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை