மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
18 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
18 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
18 hour(s) ago
ஊட்டி:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற வலை பயன்பாட்டின் மூலம், ஏழை எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து எளிய முறையில் பெறலாம்.இணைய தளம் மூலம் நேரடியாக அல்லது இ-சேவை மையங்களில் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். வலை தள பயன்பாட்டின் வாயிலாக பதிவு செய்யும் உறுப்பினர்களால் மட்டுமே, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுய தொழில் செய்ய மானியம் போன்ற உதவிகளை எளிதாக பெற முடியும்.எனவே, கைம் பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago