உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கர்நாடக முதல்வர் ஊட்டி வருகை

கர்நாடக முதல்வர் ஊட்டி வருகை

ஊட்டி:கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, தன் குடும்பத்தினருடன், நேற்று பெங்களூருவில் இருந்து, தனி ஹெலிகாப்டரில், நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வந்தார். ஊட்டி தீட்டுக்கல் 'ஹெலிபேடில்' நேற்று பகல் 2:30 மணிக்கு இறங்கிய அவர், தயாராக இருந்த கர்நாடகா மாநில அரசுக்கு சொந்தமான காரில், ஊட்டி 'ஏவ்லாக்' சாலையில் அமைந்துள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார்.அங்கு, ஓய்வு எடுக்கும் அவர், ஊட்டியில் அமைந்துள்ள கர்நாடக தோட்டக்கலைத்துறை பராமரித்து வரும், 'கர்நாடகா பூங்கா' உள்ளிட்ட, சுற்றுலா மையங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.ஊட்டியில், ஐந்து நாட்கள் ஓய்வெடுக்கும் அவர், 11ம் தேதி மீண்டும் பெங்களூருவுக்கு திரும்புகிறார். கர்நாடகா முதலமைச்சர் வருகையை ஒட்டி, இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை