மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பந்தலுார்:கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் குறைவான தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பந்தலுார் 'இன்கோ' கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், 1,400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் தொழிற்சாலை நிர்வாகம் பசுந்தேயிலை கொள்முதல் செய்து, தேயிலை துாள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொழிற்சாலை நிர்வாகத்தின், அலட்சிய போக்கினால் உறுப்பினர்களிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்து, முறையாக அதற்குரிய தொகையினை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதால், உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்து பசுந்தேயிலை வினியோகம் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் வினியோகம் செய்த பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம், ஒரு கிலோவிற்கு, 18 ரூபாய் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கிலோவுக்கு, 13.50 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்து உள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயகுமார் கூறுகையில், ''தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் விலையை தொழிற்சாலை நிர்வாகம், வழங்க வேண்டும். ஆனால். தற்போது, 4.50 ரூபாய் குறைவாக விலை வழங்குவதால், தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு மேற்கொண்டு, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த தொகையினை, உறுப்பினர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
03-Oct-2025