மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
1 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
1 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
1 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
1 hour(s) ago
குன்னுார் : குன்னுார் கோடேரி கிராமத்தில் உள்ள மகாலிங்கையா கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.குன்னூர் கோடேரி ஹட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கையா கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 20ம் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் கோபூஜை ஆகியவற்றுடன் துவங்கியது.தொடர்ந்து, மேளதாளம் முழங்க கணபதி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலமாக மகாலிங்கைய்யா சுவாமி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 21ம் தேதி முதல் கால யாக வேள்வி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.இரண்டாம் கால வேள்வி, திரவியாஹுதி, நாடி சந்தானம், கோபுர கலசம், பரிவார மூர்த்திகளுக்கும் ஜீரனோதாரன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், மகாலிங்க சுவாமிக்கு நன்னீராட்டு பெருவிழா, அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago