உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூவர்ண கொடி விற்பனை; வாங்க மக்கள் ஆர்வம்

மூவர்ண கொடி விற்பனை; வாங்க மக்கள் ஆர்வம்

ஊட்டி : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகளை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.நாட்டின், 78 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி, 'இல்லம் தோறும் மூவர்ணம்' என்ற அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் படி, பொதுமக்கள் எளிதாக தேசிய கொடியை வாங்க அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், 25 ரூபாய் செலுத்தி கொடி வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள், தன்னார்வலர்கள் மொத்தமாக வாங்கி சென்றனர். இதை தவிர, ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், தள்ளு வண்டியில் விற்கப்படும் தேசிய கொடியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை