உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை சேதமடையும் அபாயம்: உடனடி ஆய்வு அவசியம்

சாலை சேதமடையும் அபாயம்: உடனடி ஆய்வு அவசியம்

கூடலுார்;கூடலுார் முதல்மைல் அருகே ஆற்றின் கரையோரம் ஏற்பட்ட மண்ணரிப்பால் சாலையும், பாலமும் சேதமடைந்து வருகிறது.கூடலுார் முதல் மைல் பகுதியிலிருந்து, யானைசெத்தக்கொல்லி பகுதியில் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையிலிருந்து, முதல் மைல் நிழல் குடைக்கு, இணைப்புச் சாலை செல்கிறது. இச்சாலையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரம் ஏற்கனவே மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் சேதமடைந்து காணப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையும் அதனை ஒட்டிய பாலமும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில்,'தொடரும் பருவமழையில், ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளத்தில், தொடர்ந்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடையும் ஆபத்து உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை