மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
பாலக்காடு;கேரளாவில் கோடைகால விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று (3ம் தேதி) திறக்கப்படுகின்றன.புதிதாக பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்க, ஏற்பாடுகளை அரசு பள்ளிகள் செய்து வருகின்றன.பள்ளிக்கூடங்கள் வண்ணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுவர்களும், வகுப்பறைகளும் வண்ணங்களால் நிரம்பியுள்ளன. ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன.பாலக்காடு அய்யாபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில், பள்ளிக்கூட திறப்பை ஒட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சமக்ரா சிக்ஷா கேரளா (எஸ்.எஸ்.கே.,) 'வர்ண கூடாரம்' என்ற அரசு திட்டத்தின் வாயிலாக, கிடைத்த நிதி உதவியால், குழந்தைகள் விளையாடுவதற்கான சிறு கால்பந்து மைதானம், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டி தேரின் மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகளின் வெகுவாக கவரும்.
03-Oct-2025