உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில மூத்தோர் நட்புறவு போட்டி நீலகிரி வெட்டன்ஸ் எப்.சி., வெற்றி

மாநில மூத்தோர் நட்புறவு போட்டி நீலகிரி வெட்டன்ஸ் எப்.சி., வெற்றி

ஊட்டி;ஊட்டியில் நடந்த மாநில அளவிலான நட்புறவு மூத்தோர் கால்பந்து போட்டியில், நீலகிரி மூத்தோர் எப்.சி., அணி வெற்றி பெற்றது.ஊட்டியில் மாநில அளவிலான மூத்தோர் நட்புறவு போட்டி நடந்தது. இந்த போட்டியில், சென்னை பட்டாபிராமன் வெட்டன்ஸ் அணி, தமிழ்நாடு வெட்டன்ஸ் அணி மற்றும் நீலகிரி வெட்டன்ஸ் எப்.சி., அணிகள் பங்கேற்றுள்ளன.நீலகிரி வெட்டன்ஸ் எப்.சி., அணிக்கும், சென்னை பட்டாபிராமன் வெட்டன்ஸ் அணிக்கும் இடையே, முதல் போட்டி நடந்தது. போலீஸ் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரும், கால்பந்து வீரருமான சத்யன் மற்றும் வில்லியம் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.மிகவும் பரபரப்பாக நடந்த முதல் போட்டியில், துவக்க முதலே ஆதிக்கம் செலுத்திய நீலகிரி மூத்தோர் எப்.சி., அணி, 3:1 என்ற கோல் கணக்கில், சென்னை பட்டாபிராமன் மூத்தோர் அணியை வீழ்த்தியது. இரண்டாம் போட்டியிலும் நீலகிரி மூத்தோர் எப்.சி., அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை, 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. போட்டியை திரளான காப்பந்து ரசிகர்கள் கண்டு களித்தனர். ஏற்பாடுகளை, நீலகிரி மூத்தோர் கால்பந்து சங்க நிர்வாகி ராமன் ரகுநாத் மற்றும் அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை