உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கீதை காட்டும் பாதை ஆன்மிக சொற்பொழிவு

கீதை காட்டும் பாதை ஆன்மிக சொற்பொழிவு

அன்னுார்:அன்னுார் பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது. 'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம், 'கீதை காட்டும் பாதை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் நிர்வாகி சங்கர்ஸன கவுரவ தாஸ் பிரபு பேசுகையில், ''கிருஷ்ண நாம ஜெபம் இறைத்தன்மை பெற உதவும். நாம ஜெபம், கீர்த்தனை பாடுவது, இறைவனை தியானிப்பது இவை அனைத்தும் நம் வாழ்க்கையில் துன்பங்களை அகற்றி, எல்லையில்லா மகிழ்ச்சி தரக்கூடியவை,'' என்றார்.'இஸ்கான்' அமைப்பின், மது கோபால் தாஸ் பிரபு கீர்த்தனைகள் பாடினார். இதையடுத்து வார வழிபாட்டு மன்றம் சார்பில் பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை