உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்காவில் துலிப் மலர்கள் சுற்றுலா பயணியர் வியப்பு

பூங்காவில் துலிப் மலர்கள் சுற்றுலா பயணியர் வியப்பு

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட 'துலிப்' மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசன் ஏப்., மே மாதங்களில் நடக்கிறது. கோடை சீசனுக்காக கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் மற்றும் பூங்கா பாத்திகளில், 270 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. தவிர, 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மெரிகோல்டு, சால்வியா உள்ளிட்ட மலர்கள் தற்போது பூக்க தொடங்கி உள்ளது. பூங்கா நர்சரிகளில் பல்வேறு நிறங்களில் ஆயிரக்கணக்கான 'துலிப்' மலர்கள் தொட்டிகளில் தயார்படுத்தியுள்ளனர். தவிர, ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டூனிய உட்பட பல்வேறு வகையான மலர்கள் பூங்காவில் தயாராகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மலர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக வருவதால் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க பூங்கா கண்ணாடி மாளிகையில் 'துலிப்' மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று 'செல்பி', போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை