உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி :புல்வெளியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை

தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி :புல்வெளியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை

ஊட்டி;தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி நடப்பதை ஒட்டி குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளனர்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு மலர்கண்காட்சி மே, 10 ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவடைந்தது. மலர் கண்காட்சியை காண, மே மாதத்தில், 2.41 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். கண்காட்சியின் போது, அவ்வப்போது மழை பெய்தது. இதனால், பச்சை பசேலென இருந்த பிரதான புல்தரை மைதானம் சேறும், சகதியாக மாறியது. இதனை பராமரிப்பு பணி மேற்கொள்வதை காரணம் காட்டி சில பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. இதனால், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை